முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு அணிக்கு எதிரான டி 20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற ஒரே ஒரு டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

பேட்டிங் தேர்வு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி சிக்கியது.  இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஷைமான் அன்வர் 41 ரன்கள் எடுத்தார்.

ஷார்ட் அரைசதம்

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கால்டர் நைல் மற்றும் பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான ஷார்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து