முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூத் அஸார் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது சீனா

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவரான ஜெய்ஷ் - இ - முஹம்மது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஆதரவு இல்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ல் 17 வீரர்கள் பலியாகக் காரணமான தாக்குதல் உள்பட மிக மோசமான சம்பவங்களை இந்தியாவில் அரங்கேற்றியது தொடர்பாக மசூத் அஸார் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய  அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன அமைச்சர் ஜாவோ கேஹி டெல்லியில் சந்தித்து பேசிய மசூத் அஸார் குறித்த கோரிக்கையை இந்தியா மீண்டும் முன்வைத்தது. இது தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹீவா சுன்யிங்கிடம், செய்தியாளர்கள் பெய்ஜிங்கில் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

மசூத் அஸாரை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக இந்தியா கோரிக்கை வைத்த விவகாரத்தில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்து விட்டோம். சர்வதேச அளவிலான பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் சீனா எப்போதும் பங்கெடுத்து வருகிறது.

ஒரு பிரச்னை சார்ந்த சாதகமான விஷயங்களை ஆராய்ந்த பிறகே நாங்கள் எப்போதும் முடிவெடுத்து வருகிறோம். இந்நிலையில், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலை நாட்டுவதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா தொடரும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து