முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு குண்டு தயாரிப்பு தொடரும்: அதிபர் டிரம்ப்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : தங்களது ஒப்பந்தங்களை ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மீறும் வரை, அணு குண்டுகள் தயாரிப்பதை நிறுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் கூறியதாவது:-

அணு குண்டுகள் தயாரிப்பில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். ரஷ்யா போன்ற நாடுகள், ஒப்பந்தங்களை மீறி செயல்படுவதை நிறுத்தும் வரை எங்களது அணு ஆயுதத் தயாரிப்பு தொடரும். அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான பணம், மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்காவிடம் அதிகமாக உள்ளது.

அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் ஆயுதங்களையும் குறைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட. ஆனால், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்தவில்லை. எனவே, அந்த நாடுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து அணு குண்டுகள் தயாரிப்பதை நிறுத்தும் வரை அமெரிக்கா அணு குண்டுகளைத் தயாரிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து