முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான அதிகார மோதல் காரணமாக, இருவருக்கும் நெருக்கமாக இருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் புகார் காரணமாக சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அனைத்து அதிகாரங்களும் அவரிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய சி.பி.ஐ. இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பதவியேற்றுக் கொண்ட நாகேஸ்வர ராவ், சி.பி.ஐ. அலுவலகத்துக்குள் யார் யார் நுழையலாம் என்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அலோக் வர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்த ஏ.கே. பஸ்ஸி போர்ட் பிளேருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர்தான் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்தவர். ஏ.கே. பஸ்ஸி மற்றும் அருண்குமார் ஷர்மா, சாய் மனோகர், முருகேசன், அமித் குமார், மணீஷ்குமார் உள்ளிட்ட 14 பேரும் அஸ்தானா மீதான லஞ்சப் புகாரை விசாரித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து