முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட4 புதிய அரசு கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர், -  விருதுநகர் வட்டம் தாதம்பட்டி (விருதுநகர் மேற்கு), அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை மற்றும் பாலவநத்தம், காரியபட்டி வட்டம் கல்குறிச்சி ஆகிய 4 பகுதிகளில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்,  தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்  .டி.ராதாகிருஷ்ணன்   முன்னிலையில்,  பால்வளத்துறை  அமைச்சர்  .கே.டி.ராஜேந்திரபாலாஜி   கால்நடை வளர்ப்போரின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் விருதுநகர் வட்டம் தாதம்பட்டியில் (விருதுநகர் மேற்கு) ரூ.23.10 - இலட்சம் மதிப்பிலும், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை மற்றும் பாலவநத்தம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.23.10 -  லட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டம் கல்குறிச்சியில் ரூ.23.10   லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 4 இடங்களில்; ரூ.92.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அரசு கால்நடை மருந்தக கட்டிடங்களை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் கால்நடை வளர்ப்போரின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கால்நடை மருந்தக கட்டிடங்களில் கால்நடை மருத்துவர் அறை, அலுவலர்கள் அறை, மருந்துகள் வைப்பு அறை, வளர்ப்பு பிராணிகள் சிகிச்சை அறை மற்றும் கால்நடைகள் சிகிச்சை வழங்கும் பகுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கால்;நடை மருந்தகத்திற்கு மின்வசதி செய்து ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்;  .மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயகுமார்;, செயற்பொறியாளர் (கட்டிடப்பணிகள்) பொறி.நம்பிராஜன், கால்நடைத்துறை இணை இயக்குநர்  .பார்த்தசாரதி மல்லையா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து