முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளர்களின் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில்... கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் உரிய மற்றும் வெளிப்படையான அனுமதியின்றி பயன்படுத்தியதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பிரசாரம் மற்றும் அது தொடர்பான தகவல் திரட்டல் & ஆராய்ச்சி நிறுவனமானது, இவ்வாறு சேகரிக்கப்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ.5 கோடி அபராதம்...இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து