முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி கொலையில் 2 பேருக்கு சிறை

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால்பீர் கொலை வழக்கில் ஹசன் முகமது, யாசின் யூசுப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்திய வம்சாவளி....இங்கிலாந்து தலைநகர் லண்டனையொட்டிய சவுதாலில் வசித்து வந்தவர் பால்பீர் ஜோஹல் (வயது 48). இந்திய வம்சாவளி. இவர் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மார்ல்பாரோ ரோட்டில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சிறை தண்டனை....இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஹசன் முகமது (24), யாசின் யூசுப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது லண்டன் பழைய பெய்லி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஹசன் முகமதுவுக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனையும், யாசின் யூசுப்புக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து