முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான ஊழல் புகார் எஸ்.ஐ.டி விசாரணை கோரும் அவசர வழக்கை பரிசீலனை செய்கிறது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்து வருகிறது.

குழு அமைப்பு....சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான புகாரையடுத்து சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.

பொதுநல மனு....இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

பரிசீலனை....இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து