18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும் தேனி, பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      தேனி
25 theni news

தேனி - 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா நேற்று காலையில் தனது தீர்ப்பில் வழங்கினார். அதனை தொடர்ந்து தேனி மற்றும் பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனி: தேனியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் முன்னிலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் வீரமணி, நகர துணை செயலாளர் ரெங்கநாதன், நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், மற்றும் தனலட்சுமிசொக்கலிங்கம், கார்த்திக், ஜெயக்குமார், கவியரசன், பொன்னீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் : பெரியகுளத்தில்; மூன்றாந்தல் பகுதியில் ;அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி அன்பு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், நகர துணை செயலாளர் அப்துல்சமது, பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், கூட்டுறவு சங்க தலைவர் முத்து,  எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் சேகர்,   மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் தவமணி,  துணை செயலாளர் ராஜகோபால்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாகராஜ், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ராஜவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆசிக்அகமது, நகர அம்மா பேரவை செயலாளர் காஜாமுயுனுதீன், வார்டு செயலாளர்கள் முத்துப்பாண்டி, சிவக்குமார் மற்றும் முருகன், பாஸ்கரன், முத்துக்குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து