முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 பேர் சரண்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி. - பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.
 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி தம்பா கார்த்திக் (26) என்பவர் கடந்த 13.08.2018 பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டார்.
 இது தொடர்பாக பட்டுக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ் (26) உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்தனர்.
 வழக்கம் போல் 24 ம்தேதி காலை பிரகாஷ் உள்பட 7 பேரும் அந்த காவல் நிலையத்தில் வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு சரக்கு வாகனத்தில் திரும்பி வந்தனர்.தஞ்சாவூர் மெயின்ரோடு ஆலடிக்குமுளை பகுதியில் வந்தபோது 10 க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவர்கள் வந்த வாகனம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
 இதில் வேனில் இருந்து விழுந்த பிரகாஷை அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.பின்பு பிரகாஷின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் டீ கடை எதிரே மக்கள் நடமாட்டம் நிறைந்த தஞ்சாவூர் மெயின் ரோட்டில் பிரகாஷின் தலையை வைத்துவிட்டு கும்பல் தப்பி தலைமறைவாகினர்.
 இக் கொலை வழக்கு சம்பந்தமாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.
 இந்நிலையில் இக் கொலை வழக்குத் தொடர்பாக பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கையன் மகன் அருண் மன்னார்(28), ரெத்தினகுமார் மகன் இட்லி பிரசாத் (23), சேகர் மகன் செம்பு மணி (24), மகேந்திரன் மகன் மதன் (23), பன்னீர்செல்வம் மகன் போண்டா மணிகண்டன் (22), செல்லத்துரை மகன் கலையரசன் (22),ரெத்தினம் மகன் ஆசைப்பாண்டி(22), மதனகுமார் மகன் பிரகாஷ்( 22), வடிவேல் மகன் பாரதி (22) ஆகியோர் பரமக்குடி  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
 இதனைத் தொடர்ந்து சரண் அடைந்த 9 பேர்களையும் நீதிபதி பிரசாத் ,  29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து சரணடைந்த 9 பேர்களையும் இராமநாதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து