முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை மத்திய அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடையில்லை....இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும் இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகிறது.

ஐகோர்ட் உத்தரவு....இந்த நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டனர்.

827 தளங்கள் மீது...இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. கோர்ட்டு கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்தன. எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.படிப்படியாக முடக்கம்அதையடுத்து அந்த துறை இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து டெலிபோன் நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து