முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் ஐ.நா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,சவுதி பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தன்னிச்சையாக விதிக்கப்படும் மரணத் தண்டனை குறித்து புகார் தெரிவிக்கும் சிறப்பு பதவியில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆக்னஸ் கால்மார்ட் கூறும் போது, சவுதி பத்திரிகையாளர் ஜமாலுக்கு அளித்திருப்பது மறைமுக மரணத் தண்டனையாகும். முதலில் ஜமால் தூதர அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்டார். அதுவும் சவுதியின் தூதரக அலுவலகம். இரண்டாவது ஜமால் கொலையில் தொடர்புடைய அனைவரும் மாயமாகினர். அவர்கள் அனைவரும் சவுதியை சேர்ந்தவர்கள். இது அனைத்தும் ஜமால் மறைமுகமாக மரணத் தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இது அனைத்திறகு சவுதி அரசுத்தான் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து