முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான், கிரீஸ் நாட்டு தீவுகளில் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவின் ராவுசு பகுதியில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள ராவுசு நகரங்களில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.  ஒரு மாதத்துக்கு முன்புதான் 6.7 அலகுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு அங்கு 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர் அல்லது காயமுற்றவர் குறித்து இதுவரை தகவல் இல்லை.

கிரீஸிலும் நிலநடுக்கம்:கிரீஸ் நாட்டின் உள்ள சுற்றுலா தீவில் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். உயிர்ச் சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து