முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவோம்: பினராயி

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கோட்டயத்தில் நடைபெற்ற இடதுசாரி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் கிரிமினல்கள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அக்கோயிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டு புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, அங்கிருந்து விரைந்து செல்ல பக்தர்களுக்கு உதவுவது போல் அந்த புதிய நடைமுறை இருக்க வேண்டும்.பாலின சமத்துவத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும் என்றார் பினராயி விஜயன்.
 இதனிடையே, பா.ஜ.க. தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மேனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபரிமலை கோயில் கடந்த வாரம் திறக்கப்பட்டபோது, மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய பெண்ணை வழிபட செய்ய அனுமதித்து கோயில் வழிபாட்டு முறைகள் மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து