முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரமற்ற முறையில் இருந்த எவர்சில்வர் பட்டறைக்கு ரூ.5000 அபராதம் ஆணையாளர் .அனீஷ் சேகர், உத்தரவு.

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக மண்டலம் எண்.1 வார்டு எண்.6 குலமங்கலம் மெயின் ரோடு கல்யாணசுந்தரபுரம் பகுதியில்  ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மண்டலம் எண்.1 வார்டு எண்.6 மீனாம்பாள்புரம், குலமங்கலம் மெயின் ரோடு, கல்யாணசுந்தரம்புரம் 3 வது மற்றும் 4 வது தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு பணியாக வீடு வீடாக நீல நிற டிரம்கள், பாத்திரங்கள், சின்டெக்ஸ், சிமெண்ட் தொட்டி ஆகியவற்றில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரிலும், குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களையும், நீல நிற டிரம்புகளையும் கொசுபுகா வண்ணம் மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்குமாறும் கூறினார். அப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை கொசு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்த விவரங்கள் பதிவதற்காக வீடுகளின் வாசல்முகப்பில் ஒட்டப்படும் கொசு உற்பத்தி இடங்களை கண்டறிதல் வருடாந்திர காலண்டரை பார்வையிட்டு டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் காலண்டர் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்குமாறும், முறையாக பதிவு செய்யுமாறும் கூறினார். அப்பகுதியில் சுகாதாரமற்ற முறையில் தேவையற்ற பொருட்களை சாலையில் கொட்டி வைத்திருந்த எவர்சில்வர் பட்டறைக்கு ரூ.5000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் குப்பைகளை குப்பைத்தொட்டிகளின் வெளியில் கொட்டுவதை தவிர்த்து குப்பைத் தொட்டிகளில் போடுமாறு அப்பகுதி பொதுமக்களிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் (பொ)  .முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர்  .விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவி செயற் பொறியாளர் (திட்டம்)  .சுப்பிரமணி, உதவிபொறியாளர்  .பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்  .நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து