முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமாலை கொல்ல உத்தரவிட்டது யார்? சவுதிக்கு துருக்கி அதிபர் கேள்வி

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா,செய்தியாளர் ஜமால் கஷோகியை படுகொலை செய்ய உத்தரவிட்டது யார்? என்ற உண்மையை வெளியிட வேண்டும் என்று சவுதி அரசை துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஆளும் நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியின் தலைவர்களிடையே தலைநகர் அங்காராவில் அவர் பேசியதாவது:இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துணைத் தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது உறுதியாகி விட்டது. அதனை சவுதி அரேபியாவே ஒப்புக்கொண்டு விட்டது. இருந்தாலும், கொல்லப்பட்ட கஷோகியின் உடல் எங்கே? என்பதை சவுதி அரேபியா தெளிவுபடுத்தியாக வேண்டும். மேலும், இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? என்ற விவரத்தையும் அந்த நாடு வெளியிட வேண்டும். இந்த படுகொலை தொடர்பாக 18 பேரைக் கைது செய்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. அவர்களை வெளிப்படையாக பேசும் வரை உண்மைகள் வெளி வராது. எனவே, அந்த 18 பேரையும் துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களிடம் நாங்களே இந்தப் படுகொலை குறித்த விசாரணையை நடத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து