முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே பிரதமரானதால் குழப்பம் வரும் 16-ம் தேி வரை இலங்கை நாடாளுமன்றம் தற்காலிக முடக்கம் அதிபர் சிறிசேனா அறிவிப்பு

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு,வரும் 16-ம் தேதி வரை இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அறிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவித்துள்ளார். அதில், இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று பிற்பகல் 12.30 மணி முதல் நவம்பர் 16-ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.முன்னதாக, இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே, அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நாட்டின் பிரதமராக இதுவரை பொறுப்பு வகித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்ரமசிங்கேவை அப்பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவரது கட்சியுடன் வைத்திருந்த கூட்டணியை துண்டித்து கொள்வதாகவும் சிறிசேனா அதிரடியாக அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பு, ஆளும் கூட்டணி அரசுக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் எதிர்ப்புகளையும் மேலோங்க  செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீரா, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி அளித்திருப்பது சட்ட விரோதமானது. ஜனநாயகத்துக்கு முரணானது என்று கூறியுள்ளார்.இலங்கையில் உருவாகியுள்ள இந்த அசாதாரண சூழல், அந்நாட்டை கடந்து சர்வதேச அளவில் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமன்றி அண்மைக் காலமாக அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக வலம் வந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் தற்போது கரம் கோத்து ஆட்சியமைக்க முன்வந்திருப்பது உலக நாடுகளின் மொத்த கவனத்தையும் இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து