முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நம்பிக்கையை பிரதமர் இழந்து விட்டார் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நரேந்திர மோடி முரண்பாடுகளின் பிரதமராக உள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை அவர் இழந்து விட்டதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சனங்கள் அடங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேசுகையில்:நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் அரசு மவுனம் காத்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் பயத்தில் உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகளவில் நடைபெற்றுள்ளது. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதி சீர்குலைக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா, சுயதொழில் முனைப்பு, இந்திய தயாரிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சிறந்த திட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த 65 வருடங்களாக நிலைநாட்டப்பட்டு வந்த சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, பண்முகத்தன்மை உள்ளிட்டவை சீர்குலைக்கப்பட்டுள்ளது. பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்து விட்டார். எனவே இவர் முரண்பாடுகளின் பிரதமராகவே உள்ளார் என்று மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து