முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்தார் அதிபர் ட்ரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

புது டெல்லி,2019-ம் ஆண்டு நடைபெறும் நாட்டின் 69-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா விடுத்த அழைப்பை அவர் மறுத்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினவிழாவில் அதிபர் டிரம்பை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பு குறித்து இறுதி முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆதலால், அதிபர் டிரம்ப் இந்தியாவில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க மாட்டார் என்றே உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்தவிதமான தகவலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் இது குறித்து கேட்டபோது, அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு குடியரசு தினத்தன்று வருவது குறித்து வெள்ளை மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் நாங்கள் கூற இயலாது எனத் தெரிவித்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து