முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகசாலை பூஜையுடன் தேவர் குருபூஜை விழா துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 கமுதி, -கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்களுடன் ஞாயிற்றுக்கிழமை தேவர் குருபூஜை 3 நாள் விழா துவங்கியது.
     ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முன்னிலையில், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமையில்  3 நாட்கள் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவின் முதல் நாள் நிகழ்சியாக யாக சாலை பூஜை, லட்சார்சணை பெருவிழாவுடன் துவங்கியது. விழாவினை முன்னிட்டு நினைவாயத்தில் உள்ள விநாயகர் சிலை மற்றும் தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொங்கல் வைத்து முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள், மற்றும்  குடும்பத்தார்கள் தங்கவேல், ராமச்ந்திரன், பசும்பொன் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 இதனையடுத்து கமுதி மற்றும் பசும்பொன் கிராமத்தை சுற்றியுளள்ள 200 க்கும் மேற்பட்ட கிரமாங்களில் இருந்து பொதுமக்கள், பொண்கள் பால் குடம் எடுத்து கமுதி தேவர் சிலை, மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் ஊர்வலமாக பசும்பொன்னுக்கு சென்று தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.  கமுதி சிலைக்கு முன் அரசு ஊழியர்கள், மூவேந்தர் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டு, தேவர்சிலை மற்றும் மருதிபாண்டியர் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலையில், 4 மாவட்ட டி.ஐ.ஜி க்கள், 10 க்கும் மேற்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 8 ஆயிரம் போலிஸôர், போக்குவரத்து போலிஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து