முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோவிலில் புதிய 5 புனித தீர்த்த கிணறு திறப்பு பக்தர்கள் புனித நீராடல்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  ராமேசுவரம் திருக்கோவிலில் புதிய தாக திறக்கப்பட்ட 5 புனித தீர்த்த கிணறுகளில்  பக்தர்கள் நேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் 22 புனித தீர்த்தக்கிணறுகள் உள்ளது.இந்த தீர்த்தகிணற்றிற்கு செல்லும் பாதைகளால் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது. ஆன்மிகவாதிகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கின் பேரில் நீதி மன்ற  6 தீர்த்தத்தையும் மாற்ற உத்தரவு அளித்து. அதன் பேரில் திருக்கோவிலிலுள்ள மஹாலெட்சுமி,சாய்த்ரி,சாவுத்ரி,சரஸ்வதி,சங்கு,சக்கரா ஆகிய இந்த 6 புனித தீர்த்தக்கிணற்றையும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரம் வடக்கு பகுதியில் புதிய கிணறு தோண்டி மாற்றி அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.இதனை தொடர்ந்து புதிய தீர்த்தக்கிணறுகள் தோண்டும் பணிகள் முடிவடைந்தது.இந்த தீர்த்தக்கிணற்றை திறந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து.அதன் பேரில் தீர்த்தக்கிணறுகள் திறப்பதற்கான முதல் கால பூஜைகள் திருக்கோவில் வளாகத்தில் நேற்றுக்கு முன்தினம் நடைபெற்றது. இந்த பூஜையில் கலசத்தில் கோடி தீர்த்தம் மற்றும் 6 தீர்த்தத்தில் எடுக்கப்பட்ட புனித நீரை வைத்து  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகள் பிள்ளையார்பட்டி  குருக்கர் பிச்சை தலைமையில் 21 குருக்கள்கள் கொண்ட குழுவினர்கள் சிறப்பு பூஜைகளும்,கணபதி ஹோமம் பூஜைகளும்,அபிஷேக பூஜைகள் இரண்டாம் நாளான நேற்று நடத்தினார்கள்.இந்நிலையில் 6 தீர்த்தத்தில் முதல் தீர்த்தமான மஹாலெட்சுமி தீர்த்தத்தை மாற்ற ராமேசுவரம் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள்,பா.ஜ.கட்சியினர் உள்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர்.அதன் பேரில் முதல் தீர்த்தம் தவிர மற்ற சாய்த்ரி,சாவுத்ரி,சரஸ்வதி,சங்கு,சக்கரா ஆகிய ஐந்து தீர்த்தக்கிணற்றிற்கும் பூஜையில் வைக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஊற்றி ஐதீகப்படி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் தக்கார் குமரன் சேதுபதி, திருக்கோவில் இணை ஆணையர் மங்கயர்க்கரசி, மேலாளர் முருகேசன்,திருக்கோவில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகணன்,கண்காணிப்பாளர்கள், ககாரின்ராஜ், பாலாசுப்பிரமணியன்,பேஷ்கார்கள் அண்ணாதுரை,கலைச்செல்வம்,கண்ணன்,செல்லம்,நேர்முக உதவியாளர் கமலநாதன் உள்பட திருக்கோவில் அலுவலர்களும்,ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து