போடியில் அ.தி.மு.க 47-ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      தேனி
29 bodi news

போடி.-ேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அ.இ.அ.தி.மு.க வின் 47-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர் கழக செயலாளர் பழனிராஜ் தலைமையிலும், போடி ஒன்றிய கழக செயலாளர் சற்குணம், நகர் கழக இணைச்செயலாளர் குணசுந்தரிஜெயராமன், நகர் கழக துணைசெயலாளர்கள் ஜெயராம்பாண்டியன், முனியம்மாள், நகர் கழக பொருளாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாசெட்டி, சரஸ்வதிகூல்ராஜ், கோபிநாத், முன்னாள் நகர்மன்ற துணைதலைவர் வேல்மணிகாந்தி, மாவட்ட விவசாய பிரிவு இணைசெயலாளர் சேதுராம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் கனல்காந்தி வரவேற்றார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சுப்புரத்தினம், முன்னாள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அசோகன், மாவட்ட கழக செயலாளர் சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட கழக துணைச்செயலாளர் முருக்கோடை.ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட கழக செயலாளர் சையதுகான் பேசும் போது, கழகத்தை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று வரிந்துகட்டிக் கொண்டு வேலைபார்த்தவர்களுக்கு சம்மட்டி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி, சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை ; நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு கூறியுள்ளார்.  நமது கழகத்தை கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆன்மாவும், கழகத்தை வளர்த்தெடுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவும் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி காத்து வருகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அதனை மனதில் கொண்டே தற்போது டி.டி.வி.தினகரன் அதிமுகவை அழித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார். அதற்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் தான் இன்று இந்த மகத்தான தீர்ப்பு வந்துள்ளது. கழக சின்னமான இரட்டை இலை சின்னத்தை என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீக்கி விடமுடியாது. அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் அவர்களை நீக்கியபின் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து போனது. அதனை தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது மானசீகமாக ஏற்றுக் கொண்ட தலைவரான அண்ணாவின் நாமத்தை வைத்து அதிமுகவை தொடங்கினார். கடந்த 46 வருட காலத்தில் எத்தனையோ சோதனைகளை தாங்கி வந்திருக்கின்றோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு இருந்து கொண்டு அம்மாவுக்கு தெரியாமல் மகாராணியைபோல் வாழ்ந்தும், தனது சுற்றத்தார்கள் 96 பேர்களுக்கும் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சசிகலா அவர்கள் தற்போது தியாகி போலவும், தவவாழ்க்கை  வாழ்வதாகவும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். சசிகலா கையில் கழகம் சிக்கியிருந்தால் இன்று தமிழகமே சீரழிந்து போயிருக்கும். சசிகலா குடும்பத்தின் கையில் கழகம் சிக்கிவிடக்கூடாது என்றுதான் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். தர்மயுத்தத்தின் வெற்றிக்கு பின் இரண்டு அணிகளும் இணைந்து கழகத்தையும், சின்னத்தையும் மீட்டிருக்கின்றோம். கழகத்திற்கும் சின்னத்திற்கும் நாம் தான் சொந்தக்காரர்கள் என்றார். மேலும்  தற்போது கழகத்தையும், ஆட்சியையும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீhசெல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். இன்னும் சில மாதங்களிலே 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரவுள்ளது. அத்தேர்தலில் உண்மையான அதிமுகவான நமக்கே தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள். அத்தேர்தலில் கழகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட்டு அறிவிக்கப்படும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம் என்று பேசினர்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, நமது கழக 47-வது தொடக்க விழா தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏக்களின் நிலையை உயர்நீதிமன்ற நீதிபதி தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த தெளிவான முடிவை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். கழகத்தின் மீதும், இரட்டை இலை சின்னத்தின் மீதும், புரட்சித்தலைவர் மீதும், புரட்சித்தலைவி மீதும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீதும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் மாறாத பற்று வைத்திருப்பது ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுகின்ற கூட்டத்தை வைத்து பார்க்க முடிகிறது. எந்த  சூழ்நிலையிலும் கழகத்தின் தொண்டர்கள் பிரிந்து சென்றுவிடவில்லை. அவர்களை வழிநடத்துகின்ற குட்டி தலைவர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது நாங்களும் வருகிறோம். எங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர். கழக ஒருங்கிணைப்பாளர்கள் நமது கழகம் தொண்டர்கள் கழகம் எனவே பிரிந்து சென்றவர்களை வரவேற்று இருக்கிறார்கள். விரைவில் வந்து சேர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் நமது கழகம் வெற்றிவாகை சூடும் என்றார்.
 இவ்விழாவில்  நகர கிளை செயலாளர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், அம்மா பேரவை, நகர எம்.ஜி.ஆர் மன்றம், எம்.ஜி.ஆர் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மீனவரணி, சிறுபான்மை பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், அனைத்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து