முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்கள் சிறீசேனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட அதிபர் சிறீசேனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவின் புதிய கட்சி அதிக இடங்களில் வென்றது.

இதைத் தொடர்ந்து, ரணில் - சிறிசேனா கூட்டணியில் விரிசல் உருவானது. இதையடுத்து நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரணில் தோற்கடித்தார். இதன் பிறகு, ரணிலுக்கும், சிறீசேனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச் சூழலில், ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமிப்பதாக சிறிசேனா அறிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் 16-ம் தேதி வரை முடக்குவதாகவும் அவர் அறிவித்தார்.

அரசியலமைப்பு ரீதியில் பிரதமராக நியமிக்கப்பட்ட தாம், அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். இந்த நிலையில், ரணில் பிரதமராக தொடர்வதற்கு சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகாரம் வழங்கினார்.
இந்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு விட வேண்டும். குழப்பமான அரசியல் சூழலால் இலங்கையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட அதிபர் சிறிசேனவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து