முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் திட்டம்: செங்கோட்டையன் உறுதி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அரசுப் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மழலையர் பாடத்திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழலையர் பாடத் திட்டம் தாய்மொழி தமிழில் உருவாக்கப்படுமா என்று கேட்கின்றனர். இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் அரசு தமிழுக்கு முன்னுரிமை வழங்கும். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால் ஆங்கிலத்திலும் கற்றுத்தரப்படும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு மழலையர் பாடத் திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளோம். வளர்ந்து வரும் நவீன காலத்துக்கேற்பவும், மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் ரீதியான புகார்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது. பள்ளிகளில் எந்தத் தவறு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து