ரிஷி, ஆஷா நடிக்கும் மரிஜுவானா படப்பிடிப்பு துவக்கம்

த்தேடு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்டி விஜய் தயாரிப்பில் எம் டி ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தல் ஆகியோர் நடிப்பில் உருவாக உள்ள படம் ‘மரிஜுவானா’ இப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் பி.எல் தேனப்பன், சரவணன், இயக்குனர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜுமுருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தங்கம் ஜாகுவார் தங்கம், பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய் முரளி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.இயக்குனர் ராஜு முருகன் கிளாப்போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது. மேலும் நடிகர் யோகிபாபு படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த படத்திற்கு பாலரோசையா ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் குரு இசையமைக்கிறார். எம் டி விஜய் எடிட்டிங் மேற்கொள்ள சரவணன் கலையமைக்கிறார்.