முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தப்படியே 20 தொகுதிகளிலும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி விட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் 20 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை...

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை ஐகோர்ட் அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பமான மனநிலையில் தினகரன் இருந்து வருகிறார். இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகள் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். தலைமை கழக அலுவலகத்தில் 20 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர்  இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் 20 தொகுதிகளின் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில், கீழ்க்கண்டவாறு கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், துணை முதல்வர் பன்னீர்செல்வம். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், அண்ணா தொழிற்சங்க மாநில கன்வீனர்  ஜக்கையன் எம்.எல்.ஏ, தேனி மாவட்டசெயலாளர் சையதுகான், தேனி எம்.பி. சு. பார்த்திபன்.

2. பெரியகுளம் சட்டமன்ற தொகுதி:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்  அ. சுப்புரத்தினம், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் சையதுகான், தேனி எம்.பி, . சு. பார்த்திபன்.

3. பெரம்பூர் சட்டமன்ற தொகுதி:

அ.தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உடுமலை மு.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகரன், மகளிர் அணிச் செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி, வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா. பாலகங்கா, வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு எம்.பி, தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தி.நகர் பி. சத்தியா எம்.எல்.ஏ. தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி.

4. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி:

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நீலோபர் கபில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ந.ராமச்சந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் இரா. துரைக்கண்ணு, வளர்மதி, அரசுத்தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.பி.க்கள் பாரதிமோகன், கு. பரசுராமன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், மா.கோவிந்தராஜன்.

5. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி:

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் துரைக்கண்ணு, எஸ்.வளர்மதி, அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், ஆர்.கே.பாரதி மோகன் எம்.பி. பரசுராமன் எம்.பி. சி.வி.சேகர் எம்.எல்.ஏ, கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.

6. அரூர் ( தனி) சட்டமன்ற தொகுதி:

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், டாக்டர் ஏ. சரோஜா, கே.சி.கருப்பணன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளங்கோவன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன்.

7. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:

மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வெல்லமண்டிநடராஜன், அமைப்பு செயலாளர் பாப்பா சுந்தரம் , இளைஞர் அணி செயலாளர் சிவபதி, அமைப்பு செயலாளர் பரஞ்ஜோதி, அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ரகீம், ஆ. கீதா எம்.எல்.ஏ.

8. நிலக்கோட்டை( தனி) சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் , திண்டுக்கல் மாவட்டசெயலாளர் மருதராஜ், அ.தி.மு.க. எம்.பி. . உதயகுமார், எம்.எல்.ஏ பரமசிவம் (வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி).

9. மானாமதுரை ( தனி) சட்டமன்ற தொகுதி:

அமைச்சர் செங்கோட்டையன், பாஸ்கரன் , முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செந்தில்நாதன்.

10. குடியாத்தம் சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் பி. தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன், அமைப்பு செயலாளர்கள் ஆதிராஜாராம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ரவி எம்.எல்.ஏ, லோகநாதன் எம்.எல்.ஏ.

11. விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ, என். சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த. செல்லப் பாண்டியன், தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி.

12. திருப்போரூர் சட்டமன்ற தொகுதி:

அமைச்சர் சி.வி. சண்முகம், பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பா. வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், மைதிலி திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்  வாலாஜாபாத் பா. கணேசன், மரகதம் குமரவேல் எம்.பி.

13. சாத்தூர் சட்டமன்ற தொகுதி:

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி சந்திரபிரபா எம்.எல்.ஏ..

14. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி:

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் (எ) செல்வம் எம்.எல்.ஏ . மாணிக்கம் எம்.எல்.ஏ, பா. நீதிபதி எம்.எல்.ஏ.

15. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி:

அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.எல்.ஏ. செ. செம்மலை, அமைப்பு செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன், அ.தி.மு.க. விவசாய அணி தலைவர் அன்பழகன்.

16. சோளிங்கர் சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் எம்.சி. சம்பத், பாலகிருஷ்ணா ரெட்டி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சோமசுந்தரம் , வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். சு. ரவி எம்.எல்.ஏ., லோகநாதன் எம்.எல்.ஏ.

17. திருவாரூர் சட்டமன்ற தொகுதி:

அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டாக்டர் கோபால் எம்.பி. மீனவர் பிரிவு இணைச்செயலாளர் ஜெயபால்.

18. பரமக்குடி ( தனி) சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், டாக்டர் மணிகண்டன், வக்பு வாரியத்தலைவர் அன்வர் ராஜா எம்.பி. மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி.

19. ஒட்டப்பிடாராம் ( தனி) சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜூ, ஏ.ஆர். ராஜலெட்சுமி, அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் . சி.த. செல்லப் பாண்டியன், தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி.

20. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி:

அமைச்சர்கள் பா. பென்ஜமின், மா.பா. பாண்டியராஜன், டாக்டர் பி. வேணு கோபால் எம்.பி. அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.வி. ரமணா , அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திருத்தணி கோ. அரி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன் , கே.எஸ். விஜயகுமார், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் மாதவரம் ஏ. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து