முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கிய பாரத் சைக்கிள் பயணம்: திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பங்கேற்றார்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் ஆரோக்கிய பாரத் சைக்கிள் பயணத்தை திருமங்கலம் நகரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சைக்கிள் வீரர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோருடன் இணைந்து பயணத்தில் பங்கேற்று சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய மாநில அரசுகளின் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் உப்பு,இனிப்பு மற்றும் கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பேணுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார சைக்கிள் பயணம் நடைபெற்று வருகிறது.கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் வரும் ஜனவரி 26ம் தேதி புதுடெல்லியில் நிறைவு பெறுகிறது.இதில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உடலை ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திருமங்கலம் நகர் மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த ஆரோக்கிய பாரத் பயணத்தின் துவக்க விழாவிற்கு மதுரை கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார்.திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் வரவேற்றார்.ஏராளமான மாணவர்கள்,தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டுநலப்பணி திட்டமாணவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு காந்தியடிகள் போல் முகமூடிகளை அணிந்திருந்த மாணவர்களுக்கு மத்தியில் அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தார்.பின்னர் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து நடைபெற்ற ஆரோக்கிய பாரத் பயணத்தின் தொடக்க விழாவில் நூற்றுக்கணக்கான புறாக்களை பறக்க விட்டும்,கலர் கலரான பலூன்களை பறக்க விட்டும்,உடல் நலம் குறித்த விழிப்புணர்வு வில்லுப்பாட்டை தொடங்கி வைத்தும்,ஆரோக்கிய உறுதிமொழி எடுத்தும் சைக்கிள் பயணத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் பயணத்தில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நினைவு பரிசுகளும் கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் பதக்கங்களும் அமைச்சர் வழக்கினார்.இதை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்கிட அலங்கார யானைகளும்,குதிரைகளும் முன்செல்ல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.மதுரை சாலையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் பின்னே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் நடராஜன் மற்றும் 60க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் ஆரோக்கிய பாரத் சைக்கிள் பயணத்தில் பங்கேற்று சைக்கிளை ஓட்டிச் சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் வக்கீல் அன்பழகன்,உலகாணி மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமிதிருமங்கலம் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,ஒன்றியதுணைச் செயலாளர்கள் சுகுமார்,சுமதி சாமிநாதன்,மீனாலட்சுமி மற்றும் டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன்,உணவு பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து