முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் கிராமம் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 கமுதி,- பசும்பொன் கிராமத்தில் போலீசார் ஆள்ளில்லா உளவு விமானம் மற்றும்  மோப்ப நாய்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
  இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.28, 29, 30 ஆகிய நாட்களில் இந்தியா நாட்டின்  சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து இங்கு  தமிழக முதல்வர், துனை முதல்வர், தமமிழக அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூதாய தலைவர்கள், லட்சக் கணக்கான  பொது மக்கள் உள்ளிட்டோர் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த  இங்கு வந்து செல்வார்கள். இதற்கான பாதுகாப்புகளை தீவிரப்படுத்தும் வகையில் பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸôர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடம், கோட்டைமேடு மற்றும் கமுதியில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் ஆள்ளில்லா உளவு விமானம்  மற்றும் வெடிகுண்டு நிபுனர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர். இதற்காக பிரத்யோகமாக சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆள்ளில்லா விமானம் தொழில் நுட்பக் குழுவினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக சனிக்கிழமை மாலை கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் தமிழக கூடுதல் டிஜிபி விஜயகுமார் தலைமையில் தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், 4 டிஐஜிக்கள், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உட்பட 20 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அடங்கிய காவல்துறை உயர் அதிகாரிகளின் சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் கூறியதாவது. கமுதி மற்றும் பசும்பொன் பகுதிகளில் 78 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, வழக்கத்திற்கு மாறாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்களின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு கூடுதலாக 3 ஆயிரம் போலிஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் துல்லியமாக கண்டறிய வீடியோ எடுத்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து