முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை வரை கோலிக்கு ஆலோசனை வழங்க டோனி தேவை - முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேட்டிங்கில் தொய்வு

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார். 37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

விளையாடுவாரா ?

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கு தேவை

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து