முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் படேலுக்கு உலகிலேயே மிக உயர்ந்த சிலை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் - அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட பெரியது

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : இந்தியாவின் முதல் துணை பிரதமரும், இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

சுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிக உயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரம் கொண்டது.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது, 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிந்து இன்று திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.

இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கப்பட்டது. 3 லட்சம் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் சுமார் 700 டன்கள் இரும்பு நாடு முழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் இந்த சிலையைச் சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடைபெறுகிறது. வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதியான இன்று பிரதமர் மோடி இந்த சிலை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் பல மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து