முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய விமான விபத்து: மனித உடல் பாகங்கள் 24 பைகளில் மீட்பு

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா,இந்தோனேசிய லையன் ஏர் போயிங் விமான விபத்தை தொடர்ந்து ஜாவா கடற்பரப்பில் தேடுதல் குழுவினர் 24 பைகளில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் 132 பேரிடம் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்றும், ஒவ்வொரு பையிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் உடல் பாகங்கள் வைக்கப்படுவதால், ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லையன் ஏர் போயிங் விமானம் விழுந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தின் வேகம் மற்றும் எடை காரணமாக, அது கடற்பரப்புக்குள் விழுந்த போதே, அழுத்தம் காரணமாக விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியிருக்கும் என்றும், அதில் இருந்தவர்களும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம் என்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து