முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த கேரள ஐ.டி. தம்பதி பரிதாப பலி

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா,அமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐ.டி. துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதி விஷு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி. கேரள மாநிலம் செங்கனூரில் படிக்கும் போதே காதலித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஐ.டி. துறையில் வேலை கிடைத்து அங்கு சென்றனர். நியூயார்க்கில் பணியாற்றி வந்த இருவரும் சமீபத்தில் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு இடம் மாறினர்.சாகச பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் சுற்றுலா செல்வது வழக்கம். சமீபத்தில் அவர்கள் கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா ஸ்தலமாமன யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றனர்.

நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு களித்த அவர்கள் பின்னர். 800 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர்.இங்குள்ள தப்ட் பாயிண்ட் என்ற இடம் அதிக உயரம் கொண்ட இடம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த முனையில் இருந்து புகைப்படம் எடுப்பது வழக்கம். அந்த இடத்துக்கு சென்ற விஷு மற்றும் மீனாட்சி திடீரென தவறி விழுந்துள்ளனர். மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் விழுந்த அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து