முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விமான விலை விபரத்தை 10 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் விமானத்தின் விலை தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காங். குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. ஆனால் 36 ரபேல் போர் விமானங்களை ரூ. 58 ஆயிரம் கோடிக்கு வாங்க அந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தி வருகிறார். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானி லாபம் அடைந்து இருப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் கூறியதாவது,

பதில் மனு தாக்கல்...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட விவரங்களை பொது இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு விமானமும் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட கவரில் அந்த தகவல்களை வைத்து 10 நாட்களுக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். போர் விமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உத்தரவை நாங்கள் வெளியிடுகிறோம். ஒருவேளை ரபேல் ஒப்பந்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்று மத்திய அரசு கருதினால் அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யலாம்.

சி.பி.ஐ. விசாரணை...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் எத்தகைய அடிப்படையில் செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்பட வேண்டும். எங்கள் திருப்திக்காகவே நாங்கள் அந்த தகவல்களை கேட்கிறோம். ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக சொல்பவர்கள் அந்த விமானம் இந்திய விமான படைக்கு தேவையா? இல்லையா? என்பதை ஏன் கேட்கவில்லை. இந்த வழக்கு விசாரணை 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது பிரசாந்த் பூஷண் தரப்பில் ரபேல் வழக்கு விசாரணை சி.பி.ஐ. மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இப்போதைக்கு இந்த வழக்கு விசாரணை போதும். சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து