முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கடைசி ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் முதல் முறையாக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்தியா முன்னிலை...

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மீண்டும் சாஹல்...

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் இந்தியா கோப்பையை வெல்லும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றால் தொடர் சமன் ஆகும். ஆனால் இந்திய அணி இந்தப் போட்டியில் முழு வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது ஒரு நாள் போட்டியில் அணியில் இணைக்கப்பட்ட ஜடேஜா இன்றைய அணியில் இருந்து நீக்கப்பட்டு, சாஹல் மீண்டும் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இன்று ஏராளமான மாற்றம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. திருவனந்தபுரத்தில் கட்டப்பட்டுள்ள புது மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது.

முதல்முறையாக...

திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் முதல் முறையாக ஒருநாள் போட்டி நடக்கிறது. இங்கு ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த போட்டியில் இந்தியா 6 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தியது.  இந்தியாவில் ஒரு நாள் போட்டி நடைபெறும் 47-வது மைதானமாகும். புதிய ஸ்டேடியத்தில் இந்திய அணி 43 போட்டியில் 23-ல் வெற்றி பெற்றுள்ளது.

சாதனைக்கு வாய்ப்பு

இன்றைய போட்டியில் விராட்கோலி ‘டாஸ்’ வென்றால் 5 ஆட்டத்திலும் டாஸ் வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார். அசாருதீன், டிராவிட், டோனி ஆகியோர் ஒரு தொடரில் 5 ஆட்டத்திலும் ‘டாஸ்’ வென்று இருந்தனர். டோனி ஒரு ரன் எடுத்தால் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்னை தொடுவார். விராட் கோலி ஏற்கனவே 10 ஆயிரம் ரன்னை தொட்டுவிட்டார். 281 இன்னிங்சில் 10,173 ரன் எடுத்து உள்ளார். ஆசிய அணிக்காக 174 ரன்களை எடுத்துள்ளார். டோனி 51 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆயிரம் ரன்னை தொடுவார். புவனேஷ்குமார் 2 விக்கெட் எடுத்தால் 100 விக்கெட்டை தொடுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து