முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் விழாவில் ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
     ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்;பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 111-வது பிறந்த நாள் விழா மற்றும் 56-வது குருபூஜையினை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தி, அஞ்சல் துறையின் சார்பாக தேவர் திருமகனாரின் முழு உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் அட்டையினை வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.  பின்பு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக மொத்தம் 414 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 92 லட்சத்து 42 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் க.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரை வழங்கினார்கள்.  விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா  முன்னிலையுரை ஆற்றினார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் (முதுகுளத்தூர்) எஸ்.பாண்டி வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி வரவேற்புரை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார். 
 இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்.சி.சீனிவாசன் விழா பேருரையாற்றி பேசியதாவது:- ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தது. தென்னக அரசியலில் தேவர் கையிலெடுத்த இந்த குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது.  1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய சென்னை மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்றப்பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் முதன் முதலாக போராடினார். தேவர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை 1930-ல் உருவாக்கி தேவரே தலைமையேற்று நடத்தினார்.  மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்து செல்ல வைத்தியநாத அய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு.  இந்த நிலையில் ஆலய பிரவேச நடவடிக்கை குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது.  ராஜாஜி, வைத்தியநாத அய்யர், எம்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார்.  ஆலய பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும், உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு அவர் என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சி கோயிலில் ஆலய பிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள்.  அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்.  அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன்.  வைத்தியநாத அய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்.  ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடி கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது.  ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 
 1927ம் ஆண்டு தனது 19ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை சேர்த்துக் கொண்டார்.  1937 மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்;ந்த ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்றார்.  1939இல் சுபாஸ் சந்திரபோஸ் பார்வேடு பிளாக் கட்சியை உருவாக்கிய போது அதில் முக்கிய பங்கு வகித்து இந்திய அரசியலில் மிகப் பெரிய இடத்திற்கு சென்றார். 1946இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு குடியரசு பெற்ற பின் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இதில் முதுகுளத்தூர் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார்.  1957ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.  1962ல் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி தொகுதிக்குச் செல்லாமலே மாபெரும் வெற்றி பெற்றார். இவர் நான்குமுறை சட்டமன்ற தேர்தலிலும், மூன்று முறை நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார்.  1959ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் பேச மாலை 4.45 முதல் 5 மணி வரை கால் மணி நேரம் மட்டுமே பேச ஒதுக்கப்பட்டது.  புரட்சித்தலைவர் காலத்தில் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டது.  சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு, புரட்சித் தலைவி அம்மா சிலை அமைத்து  தந்தார்கள். 09.02.2014 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 13 1ஃ2 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 
 எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு ஆறாவது பாடப்புத்தகத்தில் முதல் இரண்டு பக்கங்கள் இடம் பெற்றிருந்தது. அதற்கு பிறகு வந்த நமக்கெதிரான அரசு அதை எடுத்து விட்டது.  சமீபத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, இது என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஈ கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடம் எடுத்து சொல்லியிருக்கிறேன். தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசியம் காத்த செம்மல் என்ற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு பதிலாக 4 பக்கங்களுக்கு இடம் பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பேசினார்.  இவ்விழாவில்  செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன்;, செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (களவிளம்பரம்) த.சரவணன், பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட வனஉயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார், உட்;பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து