முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவால் இந்திய கிரிக்கெட் அழிவை சந்திக்கும் ஆபத்து - முன்னாள் வீரர் கங்குலி எச்சரிக்கை

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வதாக கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல கட்டுபாடுகள்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தை வினோத்ராய் தலைமையிலான குழு நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த குழு கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த குழு இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.,இ.ஓ.) ராகுல் ஜோரி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ராகுல் ஜோரியும் விடுப்பில் சென்று விட்டார்.

நிர்வாகிக்கு கடிதம்...

இந்த நிலையில் பி.சி.சி.ஐ.யின் தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவால் பி.சி.சி.ஐ.யின் பெயர் சரிந்து வருகிறது. ராகுல்ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டால் பி.சி.சி.ஐ.யின் நன்மதிப்பு மீது கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை நிர்வாகக்குழு கையாண்ட விதம் வேதனை அளிக்கிறது. நிர்வாக குழுவில் முதலில் 4 பேர் இருந்தனர். தற்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொழில்நுட்ப குழுவை (கங்குலி, தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன்) மீறி நிர்வாகக்குழு எடுக்கிறது.

தன்னிச்சையான...

தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை நிர்வாகக்குழு மாற்றி வருகிறது. பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முடிவுகளை மாற்றி உள்ளனர். பயிற்சியாளர் நியமனம் போன்ற நிர்வாக முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுகிறது. பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. நீண்ட நாட்கள் விளையாடியவன் என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் நிலை முக்கியமாகும். பாரம்பரிய மிக்க இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு கங்குலி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து