முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவியை விவாகரத்து செய்ய ரூ. 200 கோடி கொடுத்த தொழிலதிபர்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கெடிலா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்திய மருத்துவ உலகில் பிரபலமாக இருந்து வரும் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவன உரிமையாளர் ராஜிவ் மோடிக்கும் அவரது மனைவி மோனிகாவுக்கும் குடும்பத்தில் கடும் சர்ச்சைகள் இருந்துவந்தன.

இந்நிலையில் குடும்ப கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது, இதற்காக உள்ள 6 மாத கால கட்டாய பிரிவு காலத்தையும் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஏனெனில் இருவரும் 2012 முதல் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தொழிலதிபர் ராஜிவ் மோடி, தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக மனைவி மோனிகா புகார் அளித்தார். இதனையடுத்து சோலா போலீஸ் நிலையத்தில் ஆஜரானா கெடிலா அதிபர், அங்கு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இருவருக்கும் காவல்நிலையத்தில் மூத்த வழக்கறிஞர்கள் காவல் உயரதிகாரிகள் கவுன்சிலிங் அளித்தனர். 6 மணி நேர கவுன்சிலிங்குக்குப் பிறகு இருவரும் விவாகரத்துக்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்டனர். மனைவி மோனிகா, அதிபர் ராஜிவ் மோடி மீது கிரிமினல் புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

மனைவியை விவாகரத்து செய்ய ரூ.200 கோடி அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட இதற்கான டிமாண்ட் டிராப்ட்டை ராஜிவ் மோடி மோனிகாவிடம் அளித்தார். இதில் மகனின் நிலைதான் பரிதாபம், அவர் யாருடன் இருப்பார் என்று முடிவெடுக்கப்பட்ட போது ராஜிவ் மோடி தன் உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்க மோனிகா மகன் தந்தையிடம் வளரட்டும் என்று உரிமையை விட்டுக் கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து