முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தை வலுப்படுத்தவே காங்கிரசுடன் ஒன்றிணைகிறோம் - ராகுல் சந்திப்புக்கு பின் சந்திரபாபு நாயுடு பேட்டி

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும்தான் நாங்கள் ஒன்று சேர்க்கிறோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராகுலுடனான சந்திப்புக்குப் பிறகு தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது,

இந்தச் சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. ஜனநாயகத்தை காக்கவும், இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களின் மாண்புகளைக் காக்கவும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம். பா.ஜ.க.வை தோற்கடிப்பதையும், ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள்முன் உள்ள சவால்களை சந்தித்து வெற்றி காண்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

நாட்டைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் நாங்கள் ஒன்று சேர்க்கிறோம். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்கும் பொதுத் தளமாக இதனைக் கருதுகிறோம். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து