முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு எதிராக நடிகை ரம்யா அவதூறு கருத்து பாரதிய ஜனதா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாக கருத்தை வெளியிட்ட பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தொடர்புப் பிரிவு தலைவருமான திவ்யா ஸ்பந்தனாவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில், சர்தார் வல்லபபாய் படேலின் சிலையைக் கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், சிலைக்கு அருகில் சென்ற அவர், சிலையைத் தொட்டுப் பார்த்தார். இந்தப் புகைப்படத்தைச் சுட்டுரையில் பதிவிட்ட ஸ்பந்தனா, அதனுடன் பறவை எதையும் கீழே போட்டுவிட்டதா? என்று பதிவிட்டு மோடியை ஏளனம் செய்திருந்தார். ஸ்பந்தனாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜகவினர் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:காங்கிரஸின் உண்மை முகம் தற்போது அப்பட்டமாகத் தெரிகிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம், பிரதமரைக் கீழ்த்தரமாக ஏளனம் செய்வதே, காங்கிரஸின் முக்கிய வேலை. ஏற்கெனவே, மணிசங்கர் அய்யர் மோடியை இழிவானவர் என்றும், சசி தரூர் தேள் என்றும் ஏளனம் செய்திருந்தனர். தற்போது, ஸ்பந்தனா பறவையின் எச்சம் என்று ஏளனம் செய்துள்ளார்.சராசரி மனிதனாக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ள மனிதர் பறவையின் எச்சத்தைப் போல் அவர்களுக்குத் தெரிகிறார். ஆனால், வம்சாவளியாக நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் அவர்களுக்கு ஆட்சியின் மையமாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து