முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது:தம்பிதுரை

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர்,பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. மத்திய அரசை நம்பி மாநில அரசு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில்.தான் கருத்து வேறுபாடு. மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திட்டங்களை தரும் மத்திய அரசு அதற்கான நிதியை தருவதில்லை, இருப்பினும் மாநில அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு வழங்கும் நிதி மக்களுடைய வரிப்பணம்தான், அதைத்தான் கேட்கிறோம். இவ்வாற அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து