2020 வரை தொடர்ந்து விளையாடுவேன்: குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      விளையாட்டு
mary com 2018 03 20

மும்பை,ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை, என்று தெரிவித்துள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

6-வது முறையாக...உலகம் அறிந்த பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். ஏகப்பட்ட பதக்கங்களை ஏற்கெனவே வென்றிருந்தாலும் 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்திய ரசிகர்கள் மேரி கோமை அதிகம் கவனிக்கத் தொடங்கினார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மேரி கோம் தற்போது 6-வது முறையாக அந்த பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

தொடர்ந்து விளையாடு...இதனிடையே மேரி கோம் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற உள்ளதாகவும் அடிக்கடி செய்திகள் கசிந்தன. இந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேரி கோம். இதுகுறித்து அவர் கூறும்போது, “ நான் இப்போதும் ஃபிட்டாக தான் இருக்கிறேன். தினசரி கடுமையான பயிற்சி மேற்கொள்கிறேன். ஏன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். என்னுடைய எண்ணமே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே. அதனை நான் இன்னும் சாதிக்கவில்லையே.. எப்படி ஓய்வுப்பெற முடியும். 2020 வரை தொடர்ந்து விளையாடுவேன்” என திடகாத்திரமாக சொல்லிவிட்டார்.

51 கிலோ பிரிவில்... மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான மேரி கோம் இப்போதும் கூட சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மணிப்பூரை சேர்ந்த 35 வயதான அவர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் மோத உள்ளார்.  அதேசமயம் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இல்லை என்பதால் 51 கிலோ பிரிவில் மோத திட்டமிட்டுள்ளார்.

முயற்சி செய்வேன்இ...“என்னுடைய முதல் முயற்சி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை குறிவைப்பதே. அதற்காக தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பின் என் லட்சியமான ஒலிம்பிக்கில் தங்கத்தை வெல்ல முயற்சி செய்வேன்” என கூறும் மேரி கோம் பெண்களுக்கான குத்துச்சண்டைக்கு தற்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய பாக்சிங் வாழ்கையை தொடங்கிய 2001 ஆம் ஆண்டு வாக்கில் இது அவ்வளவு பிரபலம் இல்லை எனவும் மேரிகோம் தெரிவித்துள்ளார்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து