ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விலக்கு அளிக்கிறது அமெரிக்கா

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      உலகம்
america flag 21-10-2018

வாஷிங்டன்,ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 5-ம் தேதிக்கு பிறகு பொருளாதார தடைவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்காலிகமாக இந்தியா உள்ளிட்ட 7நாடுகளுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நாளை 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அமெரிக்கா மிரட்டியபோதிலும், நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஆனால் நாளை 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்தது. இந்தநிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இதனை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து