முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய எம்.பி. தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் உறுப்பினர் இல்லாமல் காலியாக உள்ளது. இந்த 5 தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராம்நகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜே.டி.எஸ். கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 31 வேட்பாளர்கள் உள்ளன. குறிப்பாக சிவமொக்கா தொகுதியில் ஜே.டி.எஸ். சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, பா.ஜ.க. சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா ஆகியோரும், பல்லாரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தாவும், காங்கிரஸ் சார்பில் உக்ரப்பாவும், மண்டியாவில் ஜே.டி.எஸ். சார்பில் சிவராமேசுவடாவும், பா.ஜ.க. சார்பில் டாக்டர் சித்தராமையாவும் போட்டியிட்டுள்ளனர்.

அதே போல் ராம்நகர் தொகுதியில் ஜே.டி.எஸ். சார்பில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் லிங்கப்பா எம்.எல்.சியின் மகன் சந்திரசேகரும், ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடாவும், பா.ஜ.க. சார்பில் ஸ்ரீகாந்த் குல்கானியும் களத்தில் உள்ளனர். இதில் ராம்நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சந்திரசேகர் திடீரென காங்கிரசுக்கு தாவி விட்டார். இதனால் ராம்நகரில் ஜே.டி.எஸ். கட்சிக்கு போட்டியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் திட்டமிட்டபடி அங்கும் தேர்தல் நடந்தது.  நேற்று காலை திட்டமிட்டபடி சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. நேற்று காலை சிவமொக்கா தொகுதிக்குட்பட்ட சிக்கபுரா தொகுதிக்குட்பட்ட சிக்கபுரா பகுதியில் எடியூரப்பா தனது மகன் ராகவேந்திரா மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து