உலக கோப்பையை இந்திய ஹாக்கி அணி வெல்லும் - ஆஸ்திரேலிய நிபுணர் நம்பிக்கை

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      விளையாட்டு
indian hockey 2018 11 03

மெல்போர்ன் : உலக கோப்பையை இந்திய ஹாக்கி  அணியால் வெல்ல முடியும் என்று ஆஸ்திரேலிய நிபுணர் ரிக் சார்ல்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார்.

ஆலோசகராக...

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகரான ரிக் சார்ல்ஸ்வொர்த்தை பன்முகத் திறமை வாய்ந்தவர் என்று தாராளமாகக் கூறிவிடலாம். இளங்கலைப் பட்டம் பெற்ற ரிக் சார்ல்ஸ்வொர்த், பின்னர் ஒரு மருத்துவராகத் தகுதி பெற்றார், மேற்கு ஆஸ்திரேலிய அணி சார்பில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார், பத்தாண்டு காலம் ஆஸ்திரேலிய எம்.பி.யாக இருந்திருக்கிறார், ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் ஆடியிருக்கிறார், தனது பயிற்சியில் ஆஸ்திரேலியா ஒலிம்பிக்கில் வெல்ல உதவியிருக்கிறார், பல நாட்டு ஹாக்கி அணிகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

உலக கோப்பையை இந்திய ஹாக்கி  அணியால் வெல்ல முடியும் என்று ஆஸ்திரேலிய நிபுணர் ரிக் சார்ல்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

உச்சத்துக்கு உயர...

இந்திய ஹாக்கி அணியின் கதை சுவாரசியமானது. ஒரு காலத்தில் உலகில் சிறந்த ஹாக்கியை விளையாடிய முன்னோடிகள் அவர்கள். 1970-ல் ஆஸ்திரேலியா ஹாக்கி விளையாடத் தொடங்கியபோது, எங்களால் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஹாக்கியில் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான நிலையில், உங்களால் முன்னேற முடியாது. தற்போது இந்திய ஆண்கள், பெண்கள் இரு அணிகளுமே நன்றாக விளையாடி வருகின்றன. மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தவிர, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் இந்தியா மீண்டும் ஹாக்கியில் உச்சத்துக்கு உயர வேண்டும் என்று நினைக்கிறது. அது இந்தியாவுக்கும், உலக ஹாக்கிக்கும் நல்லது.

5 அணிகளில் ஒன்று

இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சித் திட்டத்தில் ஓர் இந்தியர் இருப்பது நல்லது. ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளரால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது அவசியமும் இல்லை. ஹரேந்திரா திறமைசாலி. ஆனால் வெற்றி வருவது, மற்ற துணை ஊழியர்களையும் பொருத்தது. அவருக்குச் சரியான ஆட்கள் கிட்ட வேண்டும். தற்போது உலகின் சிறந்த 5 அணிகளில் ஒன்று இந்தியா. சாம்பியன்ஸ் டிராபியில் கடந்த இரு முறைகளில் அவர்கள் இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறார்கள். அதிலும் கடந்த முறை நெதர்லாந்தில் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றபோதும், ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் கொடுத்தனர். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒரு எதிர் பாராத பின்னடைவு. நீங்கள் அதீத நம்பிக்கையில் இருக்கும்போது இதுபோல நடக்கும்தான். ஆனால், இந்தியாவால் பழைய பொற்காலத்துக்குத் திரும்ப முடியும். புவனேஸ்வரில் இம்மாதம் நடக்கும் உலகக் கோப்பையை அவர்களால் வெல்ல முடியும்.

புத்தகம் மாற்றவில்லை

ஷேன் வார்னே ஒரு சர்ச்சையான நபர். அவர், பயிற்சியாளர் ஜான் புக்கானனுக்கு பிடித்த வீரராக இருந்ததில்லை. அப்போது அவருடன் விளையாடிய ஸ்டீவ் வாக், மேத்யூ ஹைடன், கிளென் மெக்ராத் போன்றோர் நிதானம் தவறாதவர்கள். வார்னே கூறியதன் உள்விவகாரம் எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்டீவ் வாக் ஓர் அருமையான கேப்டன், வெற்றிகரமான வீரர். அவர் மீதான எனது மதிப்பை வார்னேயின் புத்தகம் மாற்றவில்லை என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து