சீனாவில் தொடர் விபத்து: தறிகெட்டு ஓடிய லாரி தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மீது மோதியது: 15 பேர்ப லி

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      உலகம்
China 04-11-2018

பெய்ஜிங்,சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மோதி ஒன்றன் மேல் ஒன்று குவிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.மேலும், 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து