பிறந்த குழந்தைக்கு ரூ. 11 ஆயிரம் டாலர் பரிசு வழங்கிய கே.எப்.சி. நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      உலகம்
KFC 04-11-2018

வாஷிங்டன்,அமெரிக்காவில் ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயர் வைக்கப்பட்ட குழந்தைக்கு 11 ஆயிரம் டாலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது பிரபல உணவு நிறுவனமான கே.எப்.சி.சமீபத்தில் கே.எப்.சி நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது, நேம் யுவர் பேபி ஹார்லாண்ட்என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்தப் போட்டியின் படி, செப்டம்பர் 9-ம் தேதி பிறந்த குழந்தைக்கு அப்பெயர் வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதோடு ஹார்லாண்ட் என்ற பெயரில் அன்றைய தினம் அமெரிக்காவில் பிறந்த முதல் குழந்தையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தங்களது நிறுவனரான சாண்டர்ஸின் பிறந்த தினத்தை ஒட்டி இந்தப் போட்டியை கே.எப்.சி ஏற்பாடு செய்திருந்தது. அதன் 11 வகை மூலிகைகளைக் கொண்டு தயாராகும் சிக்கன் ஒன்றை விளம்பரப் படுத்தும் வகையில் 11 ஆயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில், ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயரிடப்பட்ட குழந்தை வெற்றி பெற்றது. அக்குழந்தைக்கு கே.எப்.சி. நிறுவனம் 11 ஆயிரம் டாலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இந்தப் பரிசுத்தொகை ரூ. 8 லட்சத்து இரண்டாயிரம் ஆகும். ஹார்லாண்ட் ரோஸின் பெற்றோர் பெயர் அன்னா பில்சன் மற்றும் டெக்கர் பிலாட் ஆகும். பிறந்தவுடனேயே இவ்வளவு பெரியத் தொகையைப் பரிசாகப் பெற்ற அக்குழந்தைக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்துள்ள

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து