அணு ஆயுத சோதனை நடத்துவோம்: அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      உலகம்
Kim Jong  04-11-2018

பியாங்கியாங்,அணு ஆயுத சோதனை நடத்துவோம் என அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்கள் சோதனையை நடத்தி வந்தார். இதுகுறித்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் கிம் அந்த அணு ஆயுத சோதனையை நடத்துவதை கைவிட வில்லை. இதனிடையே அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக கிம் அறிவித்தார். இந்த நிலையில் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பின்போது வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதாக அமெரிக்கா உறுதி அளித்தது. இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப் போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மேலும் வெறுமனே அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதும் அதற்கு அடிபணிவதாக கூடுதல் அழுத்தங்களை கொடுப்பதும் ஒரு போதும் பலன் தராது என்று வடகொரிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து