முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப், அசாமில் கிளர்ச்சியை மீண்டும் தூண்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சி ராணுவத் தலைமை தளபதி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. ராணுவம்,காவல்துறை, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்று ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது:பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நமக்கு பல வகைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், அவற்றை நாம் திறம்பட முறியடித்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து வரும் ஆபத்துகளை நம்மால் எளிதில் சமாளித்து விடமுடியும். அதே சமயத்தில், உள்நாட்டிலிருந்து எழும் பிரச்சினைகளை கையாள்வது சவால் நிறைந்ததாக உள்ளது. பஞ்சாபில் 1980-களில் காலிஸ்தான் தீவிரவாதம் காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. பின்னர், அரசும், ராணுவமும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக காலிஸ்தான் தீவிரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த காலிஸ்தான் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளது. அவர்களின் மூலமாக பஞ்சாபில் கிளர்ச்சியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அசாமிலும் கிளர்ச்சியை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. எனவே, இவற்றை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து