ஈரானுடனான எண்ணெய் வர்த்தகம்: 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க மோடியே காரணம்:மத்திய அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Dharmendra Pradhan 2018 3 5

புதுடெல்லி,ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள 8 நாடுகளுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்திருப்பதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளே என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

உலக அளவில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பகுதி ஈரானில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் அந்நாட்டில் இருந்து தருவிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ஈரான் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதாரத் தடை விதித்து. ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் நேச நாடுகள் எதுவும் ஈடுபடக் கூடாது என்றும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் அந்நாட்டுடனான வர்த்தக நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தெரிவித்தது.அந்த நிபந்தனையை இந்தியா ஏற்காதபோதிலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை ஏற்படுத்த விரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியின் அவசியம் தொடர்பாக அமெரிக்க தரப்பிடம் இந்தியா எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ள 8 நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.  அதில் இந்தியாவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதை உறுதிபடுத்தும் வகையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர்,

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஈரானுடனான வர்த்தகத் தொடர்பில் இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எண்ணெய் இறக்குமதி நாடுகளின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.இதற்கான பெருமையும், புகழும் முழுக்க, முழுக்க இந்தியப் பிரதமர் மோடியையே சாரும். ஏனெனில் அவர்தான் இந்த விவகாரத்தில் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் நலன் குறித்து அழுத்தமான வலியுறுத்தல்களை முன்வைத்து வந்தார். அவரது முயற்சியால் இந்தியா மட்டுமன்றி பிற நாடுகளும் பயனடைந்துள்ளன என்றார் தர்மேந்திர பிரதான்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து