விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி: ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Raghubar Das 04-11-2018

ராய்ப்பூர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 28 லட்சம் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் அறிவித்துள்ளார்.ராஞ்சியில் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருள் கண்காட்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரகுவர் தாஸ் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்பம், பயிர் நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகளிடையே பகிர்ந்து கொள்வதுதான் மாநாட்டின் நோக்கம். விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும். விவசாயிகளின் தேவை கருதி, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பிரதமர் மோடி உயர்த்தியிருக்கிறார்.குஜராத்தில் மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு ஆரம்ப காலங்களில் எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மோடி முதல்வராக இருந்தபோது மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன. இதனால், விவசாயிகள் மண்ணின் தரம் அறிந்து, அதற்கேற்ப பயிர் செய்து பலன் அடைகின்றனர் என்றார் அவர்.
 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து